யாழில் சங்கிலிய மன்னனின் 407ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு
இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது நேற்று(6.6.2026) யாழ்.நல்லூர் பகுதியில் உள்ள சங்கியன் உருவச் சிலையில் சங்கிலியன் அறக்கட்டளையின் செயலாளர் சிறீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
மக்கள் விளக்கேற்றலுடன் ஆரம்பித்த குறித்த நிகழ்வில் சங்கிலிய மன்னனின் திரு உருவச் சிலைக்கு விருந்தினர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விசேட பேச்சு
அதனைத் தொடர்ந்து சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய கண்காட்சி கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் விருந்தினர்கள் உரை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து மன்னனின் மனைவிமார் நீராடிய யமுனா ஏரிக்கு ஊர்வலமாக சென்று நீரோட்டிய மலர் மாலை தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈழத்து ஞான குழந்தை சுதர்சன் அருணனின் விசேட பேச்சும் இடம் பெற்றது.
நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் டிவி அரவிந்தராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், ஸ்ரீ சுந்தர ஆஞ்சனே ஆலய பிரதம குரு சுந்தரேஸ்வர குருக்கள், இந்து சமய பேரவை தலைவர் சக்தி கிரீபன், சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 14 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan