70 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவில் பெண்ணொருவருக்கு மன்னர் சார்லஸ் மன்னிப்பு!
பிரித்தானியாவில் தூக்கிலிடப்பட்ட கடைசிப் பெண்ணான ரூத் எல்லிஸுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, பிரித்தானிய ஜனாதிபதி மூன்றாம் சார்லஸ் அடையாளப்பூர்வமாக ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார்.
1955 ஆம் ஆண்டு தனது கூட்டாளியைக் கொலை செய்த குற்றத்திற்காக அவர் தூக்கிலிடப்பட்டார். அவருக்கு "வரலாற்று ரீதியான அநீதி" இழைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே மன்னர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கருணைச் செயல்
ரூத் எல்லிஸ், கடுமையான குடும்ப வன்முறை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார் எனவும், இன்றைய காலகட்டத்தில் இந்த விடயம் வேறு கோணத்தில் அணுகப்பட்டிருக்கும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரித்தானிய நீதி அமைச்சர் டேவிட் லாமி, "70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை எம்மால் மாற்ற முடியாது.

ஆனால், இது ஒரு விதிவிலக்கான வழக்கு என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய இந்த மன்னிப்பு ஒரு கருணைச் செயலாகும்.
இது ரூத்தின் குடும்பத்தினருக்கு ஓரளவாவது நிம்மதியைத் தரும் என நம்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். ரூத் எல்லிஸின் நான்கு பேரப்பிள்ளைகள் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சட்டப்புத்தகம்
பிரித்தானிய சட்டப்படி, அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே மன்னர் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனைகளைக் குறைக்க முடியும்.

பிரித்தானியாவில் 1965 ஆம் ஆண்டு கொலைக் குற்றங்களுக்கான மரண தண்டனை ஒழிக்கப்பட்டதுடன், 1964 ஆம் ஆண்டிலேயே அங்கு இறுதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
எனினும், பிரித்தானிய சட்டப்புத்தகங்களில் இருந்து மரண தண்டனை 1998 ஆம் ஆண்டிலேயே முழுமையாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri