அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழாவில் கோபமடைந்த மன்னர்
பிரித்தானியாவின் ராணியாக ஆட்சி செய்தவர் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக கடந்த வியாழ கிழமை காலமானார். 1952ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ராணியாக அவர் இருந்துள்ளார்.
ராணியின் மரணத்தை தொடர்ந்து இங்கிலாந்தின் புதிய அரசராக இளவரசர் மூன்றாம் சார்லஸ் (வயது 73) அறிவிக்கப்பட்டார்.
சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட மூன்றாம் சார்லஸ், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். அவர் முறைப்படி அரசராக பொறுப்பேற்று கொண்டார்.
இதேபோன்று, அவுஸ்திரேலியாவின் தலைவராக மன்னர் மூன்றாம் சார்லஸ் நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்று கொண்ட நிலையில், அவரை பற்றி அறிய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், டுவிட்டரில் வெளியான காணொளி ஒன்றால் அவர் பிரபலமடைந்து வருகிறார்.
பணியாளர்களுக்கு சமிக்ஞை காட்டிய மன்னர்
இந்த காணொளியில் மன்னரை கோபமடைய செய்த நிகழ்வுகள் பற்றிய காட்சிகள் வெளிவந்து வைரலாகி வருகின்றன.
"The servant must clear my desk for me. I can't be expected to move things." pic.twitter.com/0pZqY2Xopq
— Laura Kuenssberg Translator (@BBCLauraKT) September 10, 2022
அந்த காணொளியில், மூன்றாம் சார்லஸ் அரசராக பொறுப்பேற்கும் நிகழ்வின்போது, ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு, அந்த மேஜையை தூய்மைப்படுத்தும்படி பணியாளர்களுக்கு சமிக்ஞை காட்டுகிறார்.
இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளன. எனினும், இந்த செயலை தொடர்ந்து மன்னர் கோபப்பட்டு விட்டார் என கருதிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.