பிரித்தானியா மகாராணிக்கு வாழ்த்து கூறிய வட கொரிய ஜனாதிபதி
பிரித்தானியா மகாராணி எலிசபெத் பவளவிழா கொண்டாடும் நிலையில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
ராணி மற்றும் பிரித்தானிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கடிதம் அனுப்பியதாக வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
வட கொரியாவும் பிரித்தானியாவு 2000ம் ஆண்டில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது. இருதரப்பு உறவுகளில் சரிவு இருந்தபோதிலும் இரு நாடுகளும் தலைநகரங்களில் தூதரகங்களை பராமரித்து வருகின்றன.
வட கொரியாவின் மேற்கு நாடுகளுடனான உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் மோசமடைந்துள்ளன, வட கொரியா அமெரிக்காவிற்கும் ஆசியாவில் உள்ள அதன் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் அதன் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை வளர்ச்சியை துரிதப்படுத்தியமையே இதற்கு காரணமாகும்.
இதேவேளை, பிரித்தானியா மகாராணிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் வாழ்த்து கூறியுள்ளார்.
Today, I’m joining those around the world in celebrating Her Majesty The Queen’s Platinum Jubilee. It is with gratitude for your leadership and the kindness you’ve shown me and my family that I say, may the light of your crown continue to reign supreme. pic.twitter.com/FGTebG1plm
— Barack Obama (@BarackObama) June 2, 2022