டக்ளஸ் தரப்பில் செய்த கொலைகள் விரைவில் அம்பலமாகும்..! அநுர தரப்பு எம்.பி பகிரங்கம்
ஈபிடிபி செய்த கொலைகள், கடத்தல்கள், கப்பம், ஊழல் அம்பலத்துக்கு வரும். அதனை நீதித்துறை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று(30.12.2025) வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள்
மேலும் தெரிவிக்கையில், எங்களுக்கு யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இந்த நாட்டிலே அமைதியை ஒழிக்க வேண்டும். யாரெல்லாம் மக்களுக்கு அநீதி இழைத்தார்களோ அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அந்தவகையிலேதான் இந்த விசாரணையும் முன்னெடுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நியமனம் பெற்ற குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam