அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று வருகிறோம் என கதறி அழும் ரஷ்ய வீரர்கள்!
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கும் இடையில் நடைபெற்றுககொண்டிருக்கும் போர் 8வது நாளாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் படைவீரர்களால் கைது செய்யபட்டுள்ள சில ரஷ்ய வீரர்கள், அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று வருகிறோம் என கதறி அழுதவண்ணம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பில் தெரியவருவதாவது,
எங்களை போருக்கு அனுப்பப்படுவது எங்களுக்கே தெரியாது என்றும், அப்பாவிப் பொதுமக்களை கொன்று வருவதாகவும் உக்ரைன் வீரர்களால் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் கதறி அழுத வண்ணம் வாக்குமூலம் கொடுக்கும் வீடியோ வெளியாகி சமூக வளைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதில், அமைதியாக வாழும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், தாங்கள் பீரங்கிகளுக்கு தீவனமாக மாறி விட்டதாகவும் தெரிவித்தனர்.
ரஷ்ய ராணுவத்தினர் தங்கள் சக வீரர்களின் சடலங்களைக் கூட எடுப்பதில்லை என்றும், இறுதிச் சடங்கு செய்வது கூட இல்லை என்று பிடிபட்ட ரஷ்ய வீரர்கள்
ஆதங்கப்பட்டனர் என தெரிவத்துள்ளனர்.