கென்யாவில் பலர் உயிரிழப்பு: பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையர்கள் பாதுகாப்பு
கென்யாவில் (Kenya) வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நேற்று (26) கென்யாவின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வரி விதிப்புகளுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
வரி உயர்வு
நிறைவேற்றப்பட்ட குறித்த யோசனை, 2024-2025 நிதியாண்டில் கூடுதலாக 2.7 பில்லியன் டொலர்களால் வரிகளை உயர்த்துவதை நோக்காக கொண்டிருப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.
இதன்போது கட்டிடத்தின் ஒரு பகுதியை அவர் எரியூட்டியதாகவும், இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தப்பியோடியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன்போது குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் பெருமளவானோர் கைது செய்யப்பட்;டுள்ளனர்.
இந்தநிலையில், கென்யாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும், எந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையும் இல்லை என்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் கனகநாதன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
