கொலையில் முடிந்த பணத் தகராறு: கொலையாளியை தேடும் பொலிஸார்
களுத்துறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை - மில்லனியவில் நேற்று (02.10.2023) மாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் மில்லனிய கிம்மன்துடாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் கொலையை செய்த நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பணத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தாக்கப்பட்ட நபர் பொலிஸாரை நோக்கி ஓடியதாகவும், காயமடைந்த அவரை பொலிஸார் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை! நீதிபதி சரவணராஜா வெளியேறியதில் நடந்தது என்ன..(Video)

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
