கிளிநொச்சி வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை! மக்கள் அசௌகரியம்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறையின் காரணமாக சிகிச்சைப் பெற வரும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பயன்படுத்தும் பிரதான மருத்துவமனையாக இது காணப்படுகின்றது.
நாளாந்தம் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் இந்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், குறித்த வைத்தியசாலையில் காணப்படும் மருந்தாளர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்பொண்டு வருகின்றனர்.
நீண்ட தூரங்களிலிருந்து வரும் நோயாளர்கள் மருந்து பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் அசெளகரியங்களை தீர்க்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 20 மணி நேரம் முன்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam