கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு (PHOTOS)
Kilinochchi
Sri Lanka
Accident
By Erimalai
கிளிநொச்சி - பரந்தன், பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன் பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 35 வயதுடைய கனகரத்தினம் ரீகன் 2 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் நெல் உலரவிடப்படுகின்றமையே விபத்திற்கான காரணம் என சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US