30 நாட்களாக மகளை காணவில்லை: பெற்றோர் விடுத்துள்ள வேண்டுகோள் (Photos)
கிளிநொச்சி - விநாயகபுரத்திலிருந்து நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற மாணவி ஒருவர் கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குறித்த மாணவியை பெற்றோர்கள் தேடி வருகின்றனர்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023(கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த புவனேஸ்வரன் ஆர்த்தி என்ற மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
கடந்த 05.08.2023 முதல் மாணவியை காணவில்லை என தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் வேண்டுகோள்
இந்நிலையில் மாணவியை பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும், மாணவி பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை இலங்கையின் எப்பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால் உடனடியாக 0774941522. 0772144553 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறு பெற்றோர்(தந்தை) கேட்டுக்கொண்டுள்ளனர்.