கிளிநொச்சியில் பாடசாலை நுழைவாயிலை மூடி போராட்டத்தை முன்னெடுத்த பெற்றோர் மற்றும் மாணவர்கள் (Photos)
கிளிநொச்சி - கோணாவில் மகாவித்தியாலயத்தில் காணப்படுகின்ற பாடரீதியான ஆசிரிய வெற்றிடங்களை உடன் நிவர்த்தி செய்யக் கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (12.09.2023) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பெற்றோர் மற்றும் மாணவர்கள் இணைந்து பாடசாலையின் நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை(Photos)
முதல் நிலைப் பாடசாலை
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட முதல் நிலைப் பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகிறது கோணாவில் மகா வித்தியாலயத்தியாலயம்.
இந்த பாடசாலைக்கான போதிய ஆசிரிய வளங்கள் நிவர்த்தி செய்யப்படாமையினால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், எனவே ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புமாறும் பெற்றோரால் தொடர்ச்சியாக மாகாண கல்வி திணைக்களம், வலய கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும், பாடசாலைக்கு ஆசிரியர்களை உரிய அதிகாரிகள் நியமனம் செய்த போதும் கூட நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்றும், இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட பெற்றோர்
சுமார் 450 வரையான மாணவர்கள் கல்வி கற்று வரும் இந்த பாடசாலையில் 32 ஆசிரியர்கள் தேவையாக உள்ள போதும் 22 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனையின் (கல்வி அபிவிருத்தி பிரிவு) பிரதி கல்வி பணிப்பாளர் பரஞ்ஜோதி பரணீதரன் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும் பெற்றோர் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பாடசாலையில் கடமைகளை பொறுப்பேற்கும் வரை வலயக் கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த பாடங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என எழுத்துமூல வாக்குறுதி வழங்கப்பட்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் - சுழியன், எரிமலை






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
