கிளிநொச்சியில் வரலாற்றில் முதல் தடவையாக சிறுபோக நெற் செய்கை வெற்றியளிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 78.6 வீதமான நிலப்பரப்பில் இவ்வாண்டு சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றி கொல்லப்பட்டதுடன், கால போகச் செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் இராஜகோபு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களைவிட இவ்வாண்டு அதிகூடிய நிலப்பரப்பில்
சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர்,
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது வரையான நீர்ப்பாசன குளங்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதாவது கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள இரணைமடு குளம், பிரமந்தனாறு குளம், கல்மடுக்குளம், கனகாம்பிகை குளம் உள்ளிட்ட நான்கு குளங்களும் மேற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள அக்கராயன் குளம், வன்னேரிக்குளம் குடமுருட்டிகுளம், கரியாலை நாகபடுவான் குளம், உள்ளிட்ட ஐந்து குளங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் கிழக்குப் பகுதியில் 26 ஆயிரத்து 297 ஏக்கர் நிலப்பரப்பிலும் மேற்குப் பகுதியில் 7367ஏக்கர் நிலப் பரப்பிலும் என சுமார் 33 ஆயிரத்து 664 ஏக்கர் வரையான நிலப்பரப்பு நீர்ப்பாசன பரப்பளவைக் கொண்டுள்ளது.
இது வடக்கு மாகாணத்தில் 50 வீதமான நிலப்பரப்புகளைக் கிளிநொச்சி மாவட்டம் கொண்டுள்ளது. இந்தநிலையில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட சிறுபோக செய்கையின் போது மொத்த நிலப்பரப்பில் 78.6 வீதமான நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டிலே 68.2 வீதமான நிலப் பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின்
இரணைமடுக்குளம், அக்கராயன் குளம், குடமுருட்டி குளம் ஆகிய குளங்களின் இவ்வாண்டு
கால போகச் செய்கை 100 வீதம் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் கல்மடு குளத்தின் 75
வீதமான நிலப்பரப்புகளும், வன்னேரிகுளத்தின் கீழ் 70 வீதமான நிலப்பிரபுக்களும்
புதுமுறிப்பு குளத்தில 92 வீதமானநிலப் பரப்பிலும் பயிற்செய்கை நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.





