எல்நினோ தாக்கத்தால் இலங்கையிலும் தீவிரமான மாற்றங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் 'எல் நினோ' (El Niño) வானிலை நிகழ்வு, இலங்கையிலும் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக புவியல் துறை பேராசிரியருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
எல்நினோ நிலைமை தொடர்பாக கிளிநொச்சியில் ஊடக சந்திப்பினை இன்று 10.09.2026 மேற்கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை எல் நினோ மிக வலுவாக இருக்கும் என வானிலை கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
முக்கிய காலகட்டங்கள்
இலங்கையில் இதன் தாக்கத்தை மூன்று முக்கிய காலகட்டங்களாக பிரிக்கலாம்: ஜூலை முதல் அக்டோபர் தொடக்கம் வரை: வறண்ட வானிலை நிலவும்.
அக்டோபர் முதல் டிசம்பர் முற்பகுதி வரை: தீவிரமடைந்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
டிசம்பர் நடுப்பகுதி முதல் 2027 ஜூன் வரை: மீண்டும் தீவிர வறட்சி தொடரும்.
எதிர்பார்க்கப்படும் முக்கிய பாதிப்புகள் வெப்பநிலை உயர்வு: இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 3 . C வரையிலும், நிலப்பரப்பு வெப்பநிலை 2.5 ∘ C வரையிலும் அதிகரிக்கும்.
வெள்ள அபாயங்கள்
கனமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்: அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் 3 புயல்கள் மற்றும் 7 குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்புள்ளது.

அதிக மழைப்பொழிவு: வடகிழக்கு மற்றும் இரண்டாவது இடைப்பருவக் காற்று காலத்தில் வட மாகாணங்களில் சராசரியாக 700 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகலாம். குறைந்தபட்சம் 2 பெரிய வெள்ள அபாயங்கள் ஏற்படக்கூடும்.
விவசாயம் மற்றும் மீன்பிடித் துறை பாதிப்பு: வட, கிழக்கு மாகாணங்களில் காலபோக நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டு, விளைச்சல் இழப்பு ஏற்வடையக்கூடிய சூழல் உள்ளது. மீன்பிடித் தொழிலும் இதனால் கடுமையாக பாதிக்கப்படலாம்.
கோரிக்கைகள்
உலகளாவிய ரீதியில் தானிய உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், இலங்கையின் உணவுத் தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும்.

எனவே, விவசாயிகள் நஷ்டத்தால் தொழிலைக் கைவிடாமல் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலநிலை மற்றும் விவசாயக் காப்பீட்டுத் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதுடன், உரிய மானியங்களையும் வழங்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.