போதைப்பொருள் தொடர்பில் சுமார் 40 பேர் வரையில் சிக்கியுள்ளனர் - கிளிநொச்சி பொலிஸார்
கடந்த ஒரு மாதத்தில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 40 பேர் வரையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவில் உள்ள பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (15.11.2025) கிளிநொச்சி - முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐஸ் மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளினால் கடந்த ஒரு மாத காலத்தில் 40 பேர் வரையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஏற்கனவே இவ்வாறு ஐஸ் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை உடமையில் வைத்திருந்த 90 பேர் வரையில் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கலந்து கொண்டவர்கள்
இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், மக்கள் மற்றும் பொலிஸாரிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதத்திலும் கிராம மட்டங்களிலே இடம்பெறுகின்ற குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் பல விடயங்கள்
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam