சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல் (Photos)
பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து இரண்டு வார காலத்திற்குள் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (16.09.2023) மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருவதன் காரணமாக பல இயற்கை வழங்கல் அழிக்கப்படுவதோடு நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களும் அழிக்கப்பட்டு வருவதாக பல தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிரடி உத்தரவு
அவர்களால் வழங்கப்பட்ட தகவளுக்கமைவாக அதிரடி உத்தரவாக இன்றிலிருந்து (17) இரண்டு வார காலத்திற்குள் பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார் மற்றும் கனியவள திணைக் கழகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் கடத்தல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை உடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக கல்லாறு, உமையாள்புரம், விளாவோடை, தட்டுவன்கொட்டி, இரணைமடு குளத்தின் கனகராயன் ஆற்றுப்படுகை, பன்னங்கண்டி, செருக்கன், முரசுமோட்டை மற்றும் கண்டாவளை அண்டிய பிரதேசங்களும், ஊரியான், முரசுமோட்டை, பெரியகுளம், கிளாலி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களிலேயே தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அரசாங்க அதிகாரிகள்
இந்நிலையில் அதனை தடுத்து நிறுத்த
உடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தே ஆராயப்பட்டமை
குறிப்பிடத்தக்க விடயம்.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், இராணுவத்தின் 55ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நனின் ஜெயவர்த்தனா, 551 இராணுவ கட்டளை அதிகாரி யூட் காரியகருவன, விசேட அதிரடிப்படையின் கிளிநொச்சி கட்டளை அதிகாரி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசாங்க அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |