கிளிநொச்சியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் (Photos)
கிளிநொச்சி - பூநகரி, பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு திட்டத்திற்கு எதிராக அப்பிரதேச பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டாமானது இன்று (15.12.2023) நடாத்தப்பட்டுள்ளது.
மேலும், பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொன்னாவெளிப் பகுதியில் பல ஏக்கர் காணியை சுண்ணக்கல் அகழ்விற்காக ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
புதிய அனுமதி
இந்நிலையில் அந்த நிறுவனம் சுண்ணக்கல் அகழ்வதற்காக பாரிய இயந்திரங்களுடன் உதவியுடன் அப் பகுதிக்கு வந்ததால் வேரவில் பொன்னாவெளியை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பூநகரி பிரதேச சபை செயலாளர் மற்றும் கனிய வளத் திணைக்களத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த நிறுவனம் புதிய அனுமதிகளை முழுமையாக பெறாதமை கண்டறியப்பட்ட நிலையில் சுண்ணக் கல் அகழ்வுக்காக வருகை தந்த இயந்திரங்கள் வெளியேற்றப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
