கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் துப்பாக்கிச் சூடு
யாழில் இருந்து கிளிநொச்சி முழங்காவில் பகுதியூடாக மன்னார் நோக்கி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (13.04.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நவாலி மானிப்பாயை சேர்ந்த 36 வயதுடைய செல்வ மகேந்திரன் கமலரூபன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸார் வீதி சோதனை
முழங்காவில் பகுதியில் பொலிஸார் வீதி சோதனைக்காக வழி
மறித்தும் நிறுத்தாமல் சென்ற போதே துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் மன்னார் முருங்கன் வீதி வரை பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணை
குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
