பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு வருவதில்லை: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை (Photos)
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகானந்தா பாடசாலை முன்பாக உள்ள வீதிக்கடவையில் பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு வருவதில்லை என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதிக்கடவையில், காலை மாத்திரமே பொலிஸார் கடமைக்கு வருவதாகவும் மதிய வேளை பாடசாலை கற்றல் செயற்பாடுகள் முடிவடைந்து மாணவர்கள் வீடு செல்லும் வேளை பொலிஸார் வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதில்லை என குறிப்பிடப்படுகின்றது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் சுமார் 550 மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்பப் பாடசாலையில் 300க்கும் அதிகமான மாணவர்கள் பல பகுதிகளிலும்
இருந்து, பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வருகின்றனர்.
வீதி விபத்துக்கள் அதிகம் நடைபெரும் பிரதான வீதி A-35 ஆகும். எனவே மாணவர்களின் நலன் கருதி பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல்! கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேற இந்தியா உத்தரவு









