புனித மருதமடு மாதாவின் திருச்சொரூபத்திற்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு
கிளிநொச்சி (Kilinochchi) புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதா சிலைக்கு கிளிநொச்சி பங்குத்தந்தை தலைமையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தரிசனமானது, இன்று (25.04.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, புனித மாதாக்கள் போன்று வேடமணிந்து பேண்ட் (Band) இசை மற்றும் தமிழ் இன்னியம் மூலம் வரவேற்கப்பட்டுள்ளது.
விசேட வழிபாடு
இதனை தொடர்ந்து, விசேட வழிபாடு இடம்பெற்றதுடன் மாவட்டத்தின் பல பிரதேசங்களிற்கும் திருச்சொரூப பயணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மடுமாதா முடிசூடப்பட்டு 100ஆவது ஆண்டு நிறைவையொட்டி குறித்த திருச்சொரூப தரிசனம் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில், மன்னார் ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், 1999ஆம் ஆண்டு 75ஆம் ஆண்டு பூர்த்திக்காக இவ்வாறு பயணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் யுத்தம் காரணமாக கிளிநொச்சி நகர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சென்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
