தமிழர் பகுதியில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்: உப்பு நீர் அருந்தும் அவல நிலை
கிளிநொச்சி (Kilinochchi) - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 780இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கரைச்சி - ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சுமார் 780இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
குடிநீர் திட்டங்கள்
இந்நிலையில், குறித்த பிரதேசங்களில் உள்ள கிணறுகள் யாவும் மிகக் குறிகிய காலத்திற்குள் உவர் நீராக மாறி உள்ளதால் குறித்த பிரதேச மக்கள் குடிநீர் நெருக்கடியை தொடர்ந்து எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் செயற்படுத்தப்பட்ட குடிநீர் திட்டங்களும் செயலிழந்துள்ளன.
இதன் காரணமாக, குறித்த பிரதேச மக்கள் தமக்கான குடிநீரை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
