கிளிநொச்சியில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள்! : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிளிநொச்சில் இடம்பெற்ற இரு வெவ்வேறு கொலை சம்பவங்களில் தொடர்புடைய சந்தேக நபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி - பரந்தன்
கிளிநொச்சி பரந்தன் சந்திப்பகுதில் இளைஞன் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் குத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
குறித்த கொலை சம்பவத்திற்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் நேற்று (03-01-2022) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந் நிலையில், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (02) கைதுசெய்யப்பட்டு இன்று (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி - அம்பாள்குளம்
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கடந்த 28.12.2021 அன்று முதலைப்பாலத்தின் கீழ் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்து வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் வீட்டிற்கு அருகில் வசித்த வீட்டில் இருந்த 21 அகவை இளைஞனும் அவரது 19 அகவை மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனின் வாக்கு மூலப்படி 67 அகவையுடைய வயோதிப பெண்ணை கொலைசெய்து மனைவியின் உதவியுடன் பை ஒன்றிற்குள் சுற்றி அதனை உந்துருளியில் கொண்டு சென்று முதலைப்பாலத்திற்கு கீழ் போட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கொலைசெய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இளம் தம்பதிகள் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில்
வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிகோரி முழுகடையடைப்பு போராட்டம் (Video)

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
