கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம் விடுத்துள்ள வேண்டுகோள்
கிளிநொச்சியில் வைத்தியசாலை நிர்வாகம் வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்கு செல்லும் மக்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, கிளிநொச்சியிலிருந்து வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்கு செல்லும் மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடி காரணமாக செல்ல முடியாமல் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வைத்தியசாலை வேண்டுகோள்
இவ்வாறான நிலைமை ஏற்படின் கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்துடன் பொதுமக்களை தொடர்பு கொள்ளுமாறே வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதாவது, மாதாந்த அல்லது ஏனைய சிகிச்சைகளுக்கு செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்ளும் பட்சத்தில் வைத்தியசாலையுடன் தொடர்புகொள்கின்ற போது மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க முடியுமாயின் இங்கேயே சிகிச்சை அளிக்கக்கப்படும்.
ஏனையவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தாம் நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, வெளிமாவட்டங்களுக்கு சிகிச்சைக்காக செல்கின்ற பொதுமக்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்நோக்கும் போது இவ்வாறு வைத்தியசாலை உதவியை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.