கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுத் தாய்மாரை அனுமதிப்பதில் இழுபறி நிலை !
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக வந்த தாய் ஒருவரை அனுமதிப்பதில் இழுபறி நிலை நிலவியதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (22.40.2026) இடம் பெற்றுள்ளதென கிடைக்ககப்பெற்ற தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
சிகிச்சை மறுப்பு
நேற்றைய தினம் முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இருந்து மகப்பேற்றுக்காக கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி தாய் நீண்ட நேரம் அனுமதிக்கப்படாத நிலையில் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் அழுத்தத்திற்குப் பின்னரே விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட குறித்த தாய் ஆரம்பத்தில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார அதிகாரப் பிரிவிலும் பின்னர் யாழ் பருத்திதுறையிலும் மாதாந்த கிளினிக் பெற்று வந்துள்ளார்.
இவ்வாறு வெளி மாவட்டங்களில் மாதாந்த கிளினிக் சிகிச்சை பெற்றால் அவர்களை இங்கு அனுமதிப்பதில்லை என்று குறித்த வதை்தியசாலையில் கூறிய பின்னர் இந்த இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இவ்வாறு ஒரு முறை கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் இருந்து மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த தாய் ஒருவரை முல்லைதீவு வைத்தியசாலைக்கும் மற்றும் ஒரு தாயை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கும் நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வடமாகணத்துக்கான பெண் நோயியல் வைத்தியசாலை அமைந்துள்ள போதும். அதற்கான சிகிச்சை பிரிவுகள் ஆரம்பிக்கப்படாமல் பல கோடி ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் பயன்பாடற்றுக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கப்படும்: யாழ். மாநகர சபை உறுப்பினர் தெரிவிப்பு
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri