பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட நபர் ஒருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் ஐந்து ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நபர் ஒருவர் மே மாதம் எட்டாம் திகதி அன்று கத்தி முனையில் முச்சக்கர வண்டி ஒன்றை அதன் உரிமையாளரிடமிருந்து கொள்ளையடித்துச் சென்றதுடன் பின்னால் துரத்திச் சென்ற பொலிஸாரின் சைகைகளை மீறி அரச கடமைகளுக்கு தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில்
மேலும் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்யும் நோக்கில் களவாடிய முச்சக்கர வண்டியால் மோதி கடும் காயம் ஏற்படுத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வந்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நேற்றைய தினம்(17.02.2026) குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தன்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் பன்னிரெண்டு மாத கால சிறைத்தண்டனையும் மற்றைய நபருக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இருபத்தி நான்கு மாத கால சிறைத்தண்டணையும் அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam