வடக்கு - கிழக்கு கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரித்தானியாவில் நிதி சேகரிப்பு (Photos)
எடின்பரோ மரதன் நிகழ்வில் வைத்தியர் சத்தியமூர்த்தி பங்குபற்றி 12 ஆயிரம் பவுண்ட்களுக்கு மேலான நிதியை கிளிநொச்சி மக்கள் அமைப்பிற்கு சேகரித்து வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி மக்கள் அமைப்பினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கும் கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
கல்வி வளர்ச்சிக்காக நிதி சேகரிப்பு
கிளிநொச்சி மக்கள் அமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கும் நிகழ்வு ஒன்றை எதிர்வரும் ஜூலை மாதம் முன்னெடுக்கவுள்ளது.
இதற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கிளிநொச்சியில் அடையாள மரதன் ஓட்ட நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இதில் வைத்தியர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு 42 கிலோமீற்றர் மரன் ஓடி நிறைவு செய்துள்ளார்.
கிளிநொச்சியின் பரந்தன் சந்தியில் இருந்து
கிளிநொச்சி வரை இடம்பெற்ற நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாண்ட் நாட்டு நேரம் பத்து மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் உலகமெங்கும் இருந்து சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இதேவேளை 2 லட்சம் பார்வையாளர்கள் மரதன் ஓட்டத்தில் பங்கு பற்றியவர்களுக்கு ஆதரவு ஊக்குவிப்பு வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.