கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்கள் மே தினத்திற்கு அறைகூவல்
மே தினத்தை, சிறந்த முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புகள், தெரிவித்துள்ளன.
இது தொடர்பிலான ஊடக சந்திப்பில் கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் தலைவர் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவ மோகன், இளயாதம்பி விஜயசிங்கம், இயேசு ராஜன் மீனவ சங்க பிரதிநிதி ரவீந்திரன் பெண்கள் அமைப்பின் பிரதிநிதி கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்வரும் மே 01.05.2026 திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், மீனவ சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து மே தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு தமது ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மே தினம் தொடர்பாக சித்தரிக்கப்பட்ட ஊர்தி பவனிகள் கரடிபோக்கு சந்தையில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி பசுமை பூங்கா வரை சென்றடைந்து அங்கு மே தின கண்டன கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்களின் போக்குவரத்து வசதிக்காக போக்குவரத்து வாகன ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே அனைத்து தரப்பினரும் எதிர்வரும் முதலாம் திகதி 2.00 மணியளவில் கரடி போக்கு சந்திக்கு வருகை தந்து சிறந்த முறையில் மே தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தமது பூரண ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அன்றைய தினம் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும் குறித்த ஊடக சந்திப்பில் அறிவித்திருந்தனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam