கிளிநொச்சியில் இடம்பெற்ற விவசாயக் குழுக்கூட்டம்
கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக்கூட்டம் இன்றைய தினம்(22.07.2026) மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் சிறுபோக அறுவடை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நெற் கொள்வனவு மற்றும் சிறுபோக விவசாய செய்கைக்கான நீர்ப்பாசன தேவைப்பாடு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் கடுமையான வெப்பநிலை காணப்படுவதால் மக்கள் நீரை சிக்கனமாகவும் மாசுபடுத்தாது பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கு
விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உப உணவு உற்பத்தி திட்டம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப திட்டம் மற்றும் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்கான "பாதுகாப்புத் துப்பாக்கி " திட்டம் ஆகிய திட்டங்களுக்கான முன்மொழிவுகளை விவசாயிகள் தமது அமைப்புகள் மூலமாக சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

வீதிகளில் நெல் உலர்த்துவதால் ஏற்படும் வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கான மாற்று நடைமுறைகள் உள்ளிட்ட விவசாய துறைசார்ந்த விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி),விவசாய பணிப்பாளர்,பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள்,பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், துறை சார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.