கிளிநொச்சியில் அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட சிறுபோக செய்கை : பாதிக்கப்பட்டுள்ள விவசாயி
கிளிநொச்சி (Kilinochchi) - இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கைக்காக அனுமதிக்கப்பட்ட சின்னக்காடு கமக்கார அமைப்பு பகுதியின் 15 ஏக்கர் நிலப்பரப்பு எந்தவிதமான அறிவித்தலும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது.
நெல் விதைப்பதற்காக காணியை தயார்படுத்தி இருந்த நிலையில் இன்றைய (30-04-2024) தினம் சினக்காடு கமக்கார அமைப்பினரும் இரணைமடு சம்மேளனமும் இணைந்து பயிர்செய்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக பயிர்செய்கைக்காக நிலத்தை தயார்படுத்தி வைத்திருந்த விவசாயி பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட விதை நெல்
இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக செய்கைக்கு தீர்மானிக்கப்பட்ட சின்னக்காடு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள பகுதி ஒன்றில் உள்ள 35 ஏக்கர் காணி பயிர் செய்கைக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிலத்திற்கு நீர் வழங்கப்பட்டு ஆரம்பப் பண்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே, தயார்படுத்திய பயிர்ச்செய்கை திடீரென தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விதைப்பு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 15 மூடை விதை நெல்லும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விவசாயி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |