கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பம்
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) பகல் 9.30 மணிக்கு. கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் வரவேற்புரையுடனும் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள்
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை வகுத்தல் தொடர்பாகவும் உடனடி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 17 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? News Lankasri
