டொனால்ட் ட்ரம்பின் முடிவுகளால் உலகம் உட்பட இலங்கையை நெருங்கும் ஆபத்து!
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.
இவருடைய புதிய முடிவுகளால் இலங்கை உட்பட பல உலக நாடுகள் பாதிப்படைந்துள்ளன.
இதன்படி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் அமெரிக்க காங்கிரஸுக்கு வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, USAID மூலம் இலங்கைக்கு, அமெரிக்கா வழங்கும் உதவி திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
2024-2025 நிதியாண்டில் இலங்கை 53 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்று வந்தது, இவை அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களை பகுப்பாய்வு செய்த உலகளாவிய மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டொனல்ட் டிரம்பின் முடிவுகளால் உலகம் உட்பட இலங்கையை நெருங்கும் ஆபத்து குறித்து கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...
