கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (Photos)
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இந்த வருடத்திற்கான இறுதிக் கூட்டம் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத்தலைவர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஏற்கனவே மாவட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கான வேலைத்திட்டங்கள்
மேலும், முன்மொழிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி கோருவதுடன் மாவட்டத்தில் இதுவரை தீர்வுகள் காணாது இருக்கின்ற பிரச்சினைகளை இனம்கண்டு அதற்கான தீர்வினை காணுவது மற்றும் தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைந்து மாவட்டத்திற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஆகிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது விசேடமாக ஜனவரி மாதம் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு வருகைதரும் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களது வருகையை மக்களுடைய முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், துறை சார்ந்த தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களகங்களின் அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |