10 நாட்களுக்கு மேல் தொடரும் கனமழை - கிளிநொச்சி வர்த்தக சந்தை வியாபாரிகளின் முக்கிய கோரிக்கை
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தைகட்டிடத் தொகுதிகளை சீரமைத்து தருமாறு அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி ஏற்பட்ட, சூறாவளி காற்றின் காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டிடத் தொகுதிகளின் கூரை முற்றும் முழுதாக காற்றினால் தூக்கி வீசப்பட்டு பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
வியாபாரிகளின் கோரிக்கை
அன்று முதல் இன்று வரை சீரற்ற காலநிலை நிலவி வருவதால் அப்பகுதி வர்த்தக சந்தையின் கூரை வேலைகள் திருத்தம் செய்யப்படாமல் உள்ளன.

இதன் காரணமாக அந்த பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் காய்கறி வியாபாரிகள் நாளாந்தம் மழையில் நனைந்து கொண்டு வியாபாரம் செய்ய முடியாது என்றும், காய்கறிகள் இதனால் சேதமாகின்றன என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு நமது வாழ்வாதாரத்தை தொடர்ந்து மேற்கொள்வதற்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.