கிளிநொச்சி ஆயுள்வேத வைத்தியசாலை திறந்து வைப்பு
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆயுள்வேத வைத்தியசாலை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
குறித்த ஆயுள்வேத வைத்தியசாலை இன்று(13.02.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆயுள்வேத வைத்தியசாலை கையளிப்பு
பளை பிரதேசத்தில் அமைந்துள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம், வடக்கு மாகாண சபைக்கு வழங்கும் சமூக வலுவூட்டல் நன்கொடை நிதி 17மில்லியன் ரூபாவும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நிதி 12மில்லியன் ரூபாவுமாக 29 மில்லியன் ரூபா செலவில் குறித்த ஆயுள்வேத வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கலந்து கொண்டுள்ளார்.
அத்துடன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்.ப.சத்தியராகவன், பளை புனித அந்திரேயா ஆலய அருட்பணி.கி.வரதராஜன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் .இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri