கிளிநொச்சியில் நாவல் பழ வியாபாரம் செய்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி என்னும் பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து இன்று 24.09.2026 பிற்பகல் 3 மணியளவில் பரநதன் பூநகரி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த பகுதியில் நாவல்ப்பழ வியாபாரத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்ட பொழுது பூநகரி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி உருத்திரபுரம் - எள்ளுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நிரோசன் லக்சன் என்ற சிறுவனே விபத்தில் பலியாகியுள்ளான்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமலுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு! ஜானகி சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam