கிளிநொச்சியில் பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகிய கப் ரக வாகனம்
கிளிநொச்சியில்(Kilinochchi) வேக கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம் ஒன்று பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது, நேற்றையதினம்(31) இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் காயமடைந்த வாகன சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து
கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் மற்றும் கண்டாவளை பாலங்களில் தொடர்ச்சியாக இரவு வேலைகளில் விபத்துக்கள் இடம்பெற்று வருவதாகவும் இதன் காரணமாக இரவு வேலைகளில் வாகனம் செலுத்துவதில் பெரும் சவாலாக உள்ளதாகவும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அமைந்துள்ள பாலத்தினை புனரமைத்து தருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அத்துடன் வாகன சாரதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் பல வருட காலமாக இடை நடுவே கைவிட்ட நிலையின் இப்பாலத்தின் உடைந்த பகுதியில் பல வாகனங்கள் விழுந்து விபத்துக்களில் சேதமடைந்துள்ளதுடன் பலரும் காயமடைந்து வருகின்றனர் அத்துடன் தற்பொழுது இரவு வேலைகளில் இப்பாலத்தின் ஒளிவிளக்கு எதுவும் ஒளிர விடாமல் காரணமாக பாலம் எங்கு உள்ளது சேதம் எங்கு உள்ளது என்று தெரியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |