கிளிநொச்சி ஏ35 பிரதான வீதியில் உள்ள பாலத்தினால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள்
கிளிநொச்சி (Kilinochchi) ஏ35 பிரதான வீதியின் கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் பலவருட காலமாக இடையில் கைவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இருந்த பாலத்தின் ஊடாக முல்லைத்தீவு - பரந்தன் வழியாக பயணிக்கும் அதிகளவான பயணிகள் இரவு நேரத்தில் பெரும் அசோகரியங்களை மேற்கொள்வதுடன் பலர் வீதி விபத்துக்களில் காயமடைந்து வருகின்றனர்.
இவ்வாறு காணப்பட்ட பாலத்தில் பரந்தன் பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்ட பாலத்தின் உட்பகுதியில் விழுந்ததன் காரணமாக இருவர் மரணித்துள்ளனர்.
விபத்துக்கள்
மரணித்தவர்கள் இருவரும் ஜெய்க்கா வீட்டுத்திட்டம் இக்பால் நகர் நிலாவளி பகுதியைச் சேர்ந்த அண்டன் சாந்தன் 23 வயதுடைய வரும் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சசிகரன் சிம்புரதன் இக்பால் நகர் நிலா ஒளி திருகோணமலை பகுதியை இருவரின் சடலங்களே மீட்க்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இவர்களது சடலத்தினை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்மால்ஜெமின் முன்னிலையில் அப்பகுதியில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் இறந்தவர்களிடமிருந்து 71 100 ரூபாய் பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட நீதவான் முள்ளிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |