கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கடத்தல்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து டுபாயில் இருந்து வந்த வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடத்தி செல்லப்பட்ட நபரை பொலிஸ் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த வர்த்தகரிடம் இருந்து தங்கம் அடங்கிய 8 ஜெல் பொதிகளை பலவந்தமாக எடுத்துச் சென்ற 2 பொலிஸ் சார்ஜன்ட்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கத் தூள் கலந்த பொதி
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், வெளிப்படுத்திய தகவலுக்கமைய, தங்கத் தூள் கலந்த இரண்டு ஜெல் பொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொஸ்வத்த கொட்டாரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகத்தின் பேரில் இந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டொலர் இல்லையெனில் மீண்டும் இறக்குமதிக்கு கட்டுப்பாடு : ஒரே இரவில் ரூபாவின் பெறுமதியில் மாற்றம் ஏற்படுமா
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam