தமிழ் தொழிலதிபரை கடத்தி கப்பம்கோரி நடந்த பல கொடுமைகள்! அம்பலமான முன்னாள் நீதியரசரின் அட்டூழியங்கள்
இலங்கையில் நிலவிய போர் காலக்கட்டத்தின் போது 2006 ஜூலை மாதம் கொழும்பில் தமிழ் தொழிலதிபர் நடராஜா ஸ்கந்தராஜா அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்க பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
போர் சூழ்நிலையின் போது, 2006 ஜூலை 20 அன்று கொழும்பு 7 கிரகரி வீதியில் தொழிலதிபர் நடராஜா ஸ்கந்தராஜா தனது இல்லத்திலிருந்து கடைக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அவரும் அவருடைய சாரதியான ராமையா ஜெயராஜும் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டனர்.
குடும்பத்தினரால் வழங்கப்பட்ட பிணைப்பணம்
இவரை விடுவிப்பதற்காகக் கடத்தல்காரர்களால் கேட்கப்பட்ட பெருந்தொகை பிணைப்பணம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட போதிலும், அவரோ அல்லது அவருடைய சாரதியோ அதன் பின்னர் விடுவிக்கப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்க திடுக்கிடும் மற்றும் அவருக்கு நடந்த பல கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தொழிலதிபர் எவ்வாறு கடத்தப்பட்டார்
கொழும்பு 11, 4ஆம் குறுக்குத் தெருவில் அமைந்திருந்த 'கலா டிரேடர்ஸ்' (Kala Traders (Pvt) Ltd) என்ற நிறுவனத்தின் ஊடாகப் பெருமளவில் சீனி இறக்குமதி மற்றும் விநியோக வர்த்தகத்தில் ஈடுபட்டதால், இவர் பொதுவாக 'சீனி முதலாளி' என அழைக்கப்பட்டார்.
ரோஹண குமார என்று சொல்லப்படுபவர், முன்னாள் நீதியரசர் சரத் சந்த சில்வாவின் செயலாளர் தொழிலதிபரை கடத்தி கப்பம் கோரியுள்ளனர்.
இதன்பின்னர் குறித்த நபரை கொலை செய்து அவரது மனைவியை மோசமான நடத்தைக்கு அழைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் நீதியரசர் சரத் என் சில்வாவும் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரின் சுமார் 5000 கோடி சொத்துகளை கடற்படை (Navy) கப்பக்கும்பலும், ரோஹண குமாரவும் கொள்ளையடித்துள்ளனர். .
இதில் பிக்கு ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதுடன், இந்த பிக்குவின் விகாரை களனி பாலத்துக்கு பக்கத்தில் உள்ளது. அந்த இடம் ஒரு துணை இராணுவ (Paramilitary) மையமாக தான் இயங்கிய நிலையில், குறித்த கும்பல் விகாரையில் கடத்தல் செயற்பாட்டை நடத்தியுள்ளது.
தொழிலதிபரை கொலை செய்த பின்னர் நீதியரசர் சரத் நந்த சில்வா, அவர்களை ஒரு வரி வழக்கில் (Tax case) மாட்டிவிட்டு, அந்த வரி வழக்கிற்குத் தேவையான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான பின்னணியை உருவாக்கி தொழிலதிபரின் மனைவியை மோசமான செயலுக்கு அழைத்துள்ளனர்.
இவையொல்லாம் நடந்தும் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் இன்று கோடிக்கணக்கான சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
92, விஜயராம வீதி, கொழும்பு 07 இல் உள்ள 'கலா டிரேடர்ஸ்' தலைமையகத்தை இன்று சவேந்திர சில்வாவும், ரோஹண குமாரவும் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சவேந்திர சில்வாவும் ரோஹண குமாரவும் உறவினர்கள் என்பதற்கான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
you may like this video
திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்.. விஜய் தேவரகொண்டா பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri