கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக அணி திரளுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு
தமிழ் இனப் பரம்பலை சிதைக்கும் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக அனைவரும் வவுனியாவில் அணிதிரள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், படிப்படியாக நாங்கள் காணிகளை இழந்து வருகிறோம். கிழக்கு மாகாணத்தில் பெரியளவு காணி இழக்கப்பட்டு இருக்கிறது.
கரி நாள் பேரணி
வடக்கு மாகாணத்திலும் அந்த விடயங்கள் பல்வேறுபட்ட இடங்களில் நடந்துள்ளது. நடக்கிறது. அனைத்து தமிழ் மக்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு ஆதரவாகவும் அனைவரையும் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.