இலங்கை - இந்திய கடற்படை தளபதிகள் முக்கிய பேச்சுவார்த்தை
இலங்கை மற்றும் இந்தியாவின் பிராந்திய கடற்படை தளபதிகளுக்கிடையேயான உயர்மட்ட சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதன்போது இந்திய மீனவர்கள் இலங்கையின் பிராந்திய கடற்பரப்பில் சட்டவிரோதமாக, இழுவைப்படகுகளில் மீன்பிடிக்கும் விடயம் முக்கிய இடம்பிடிக்கும் என்று இலங்கையின் கடற்படை தரப்புகள் தெரிவித்துள்ளன.
அண்மைக்காலமாக இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பில் இழுவைப் படகு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொள்வதை அடுத்து இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை குழுவுக்கு வடக்கு கடற்படை தளபதி பிரியந்த பெரேரா தலைமை தாங்குவார். இந்திய கடற்படை குழுவினர் சென்னையில் ஒரு கடற்படை தளபதியின் தலைமையில் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
சர்வதேச கடல் எல்லைக்கோடு அருகில் உள்ள கடற்படை கப்பலில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri