ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சரத் பொன்சேகாவிற்கு கிடைக்கவுள்ள முக்கிய பதவி
"ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி விரைவில் மலரும். அந்த ஆட்சியில் நான் தான் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீண்டும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
"நல்லாட்சியின் போது தலைமைப் பதவிகளை வகித்தவர்களின் செயற்பாடுகள் காரணமாகவே அந்த அரசு கவிழ்ந்தது.
தற்போதைய அரசும் அப்படித்தான். எனவே, விரைவில் எங்கள் ஆட்சி வரும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சு பதவி எனக்கு வழங்கப்படும் என சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.
எமது ஆட்சி வருவது உறுதி என்பதால், எனக்கான அமைச்சுப் பதவியும் உறுதியாகியுள்ளது.
நல்லாட்சியின் போது, சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவியை எனக்கு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.அந்தப் பதவி எனக்கு வழங்கப்பட்டால் முதலில் அவரைத்தான் கைது செய்வேன் என அவர் அஞ்சினார். அதனால் பதவி வழங்கவில்லை என்றார்.
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri