பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய வீரர்கள்
அக்டோபர் 15 ஆம் திகதி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்தே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை
இதன்படி அணியின் முன்னாள் தலைவர் பாபர் அசாம், சாஹீன், நசீம், சர்பராஸ் அகமது ஆகியோர் அணியில் சேர்ந்துக் கொள்ளப்படவில்லை.
குறித்த வீரர்களின் தற்போதைய நிலை மற்றும் உடற்தகுதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், 2024-25 சர்வதேச கிரிக்கெட் பருவத்தில் பாகிஸ்தானின் எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டும், பாபர் அசாம், சாஹீன், நசீம் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
எனினும் சர்பராஸ் அகமது டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளமையால், அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை பதிலாக சான் மசூத் தலைமையில் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
