யூசீ ஓட்ஸ் மில்லிங் நிறுவனத்தை பார்வையிட்டுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள்
தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஓட்ஸ் தயாரிக்கும் நிறுவனமான யூசீ ஓட்ஸ் மில்லிங் நிறுவனத்தை நானும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானும், அமைச்சின் செயலாளர் ஷர்ச டி சில்வாவும் இணைந்து பார்வையிட்டோம் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகப்பூர்வ முக்கப்புத்த பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நிறுவனம் 40 நாடுகளுக்கும் , கெல்லாக்ஸ் , டிஸ்னி, லூலூ, டாடா, ரிலையன்ஸ் மற்றும் பல நிறுவனங்களுக்கும் ஓட்ஸ் ஏற்றுமதி செய்கிறது.
நிர்வாக இயக்குநர் ராகவ் குப்தா அழைப்பின் பேரில் சென்று நாங்கள் நிறுவனத்தைப் பார்வையிட்டோம்.
பின்னர் கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அப்பகுதிகளில் இந்நிறுவனத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினோம் எனத் தெரிவித்துள்ளார்.


