பொது இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அரசாங்க பிரதிநிதிகள்! பகிரங்கமாக எதிர்க்கும் பொது மக்கள்
இலங்கையில் அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய அரச அதிகாரிகள் பொது இடங்களுக்கு செல்லும் போது, மக்களால் அவமதிக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
முக்கிய பிரமுகர்களுக்கு (VIP) மக்கள் எதிர்ப்பை வெளியிட்ட சில சம்பவங்கள் அண்மையில் நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இவ்வாறான புதிய சம்பவம் நேற்று முன்தினம் கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள சிறப்பு அங்காடி (Super Market) ஒன்றில் நடந்துள்ளது.
அரசாங்கத்தில் முக்கியமான பதவியை வகித்து வரும் முக்கிய பிரமுகர் சுமார் 11 மணியளவில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சிறப்பு அங்காடிக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் சிறப்பு அங்காடிக்குள் இருந்த இளைஞர்கள் சிலரின் ஹூ சத்தத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இந்த நிலையில், நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர், அந்த முக்கிய பிரமுகர், தான் கொள்வனவு செய்த பொருட்கள் அடங்கிய பொதியையும் சிறப்பு அங்காடிக்குள் வைத்து விட்டு வெளியேறியதாக தெரியவருகிறது.
இந்த முக்கிய பிரமுகர், நாட்டில் ஆட்சியில் இருந்த சில அரசாங்கங்களில் உயர் பதவிகளை வகித்தவர் என கூறப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதன் வெளிப்பாடாகவே மக்கள் இவ்வாறு பகிரங்கமாக தமது எதிர்ப்புகளை வெளியிட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
