பசில் தலைமையில் முக்கிய மந்திராலோசனை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற தலைவர்களின் கூட்டம் கட்சியின் நிறுவனர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது.
இன்று (17.03.2023) பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு, உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பு மற்றும் மே தின பேரணி என்பன குறித்து முதன்மையாக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
விசேட கவனம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்சியின் வாக்காளர் தளத்தை மேலும் வலுப்படுத்துவது மற்றும் உள்ளூராட்சி சபைகளின் காலம் முடிவடைந்ததன் பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
தேர்தல் தொடர்பாக மாவட்ட அளவிலும், தொகுதி அளவிலும் நடைபெறும் கூட்டங்களுக்கு மேலதிகமாக, வேட்பாளர்கள் தங்கள் பிரதேசத்தில் நட்புறவுக் கூட்டங்கள் மூலம் கட்சி உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டுவதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
