உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னதாக அறிந்த அநுர அரசின் முக்கிய அமைச்சர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கிய சில விடயங்களை ஜனாதிபதியும், தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் அறிந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய அவர்,
“தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்துள்ளார் என்பதை அவர் ஏற்றுக்கொண்டதுடன் இந்த தாக்குதலுக்கு அரச புலனாய்வு பிரிவில் சில அதிகாரிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
விசாரணை
அதேநேரம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச அதிகாரிகளை விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அப்படியானால் இவர்கள் இரண்டு பேருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சில விடயங்களை அறிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
அதனால் இந்த விசாரணை அறிக்கையை பரிசோதிக்கும்போது வெளிப்படைத்தன்மையும் மேற்கொள்வதாக உறுதியாளிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தப்பிச்செல்ல முடியாது
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,
“அந்த விசாரணைகளை நாங்கள் மேற்கொள்வோம். இதில் இருந்து தப்பிச்செல்லப்போவதில்லை. நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருவதன் மூலம் பல புதிய விடயங்கள் வெளிவந்துள்ளன.
அந்த விடயங்களை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறோம். அதனால் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதுவும் இல்லை” என கூறியுள்ளார்.