போதைப்பொருள் விவகாரத்தில் கடற்படை வீரர் உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற மூவர் நேற்று(30.04.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 38 வயதான சிப்பாய், கடற்படை வீரர் மற்றும் 37 வயதுடைய பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் கைது
கைது செய்யப்படும் போது இரண்டு பாதுகாப்பு படை வீரர்களும் விடுப்பில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்துகளை பூனாவ பகுதியில் வைத்து சோதனையிட்ட போதே கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் பைகளில்10 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
