கேரள நீதிமன்றில் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிணை மனு நிராகரிப்பு
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு இலங்கை கடற்றொழிலாளர்களின் பிணை மனுவை கேரள மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கைது சம்பவம்
இந்திய கடலோர காவல்படையினரால் 2021 மார்ச் 07 ஆம் அன்று குறித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது ஆறு இலங்கை பிரஜைகளுடன் அகர்ஸா துவ என்ற மீன்பிடி படகில் போதைப்பொருட்களை கைப்பற்றியதுடன் அதில் இருந்து 6 பேரையும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திடம் ஒப்படைத்தது.
மனு நிராகரிப்பு
இந்தநிலையில் இன்று குறித்த 6 பேருக்கும் பிணை மனு கோரப்பட்ட போது, மனுதாரர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.
மனுதாரர்கள் சர்வதேச போதைப்பொருள் விற்பனைக் குழுவின் உறுப்பினர்கள் என்று
கேரள காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
