எட்டாவது நாளை எட்டிய கேப்பாப்புலவு போராட்டம்! காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு

Mullaitivu Protest
By Shan Jul 01, 2026 09:30 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்று (01.07.2026) எட்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் பௌத்த மதகுரு தலைமையிலான சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்பினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

முடிவுக்கு வரும் அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்! அரசாங்கத்தின் அறிவிப்பு

முடிவுக்கு வரும் அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்! அரசாங்கத்தின் அறிவிப்பு

எட்டாவது நாள் 

கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

எட்டாவது நாளை எட்டிய கேப்பாப்புலவு போராட்டம்! காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு | Keppapulavu Protest Enters Eighth Day

இன்றைய சந்திப்பின்போது காணி விடுவிப்பு தொடர்பான மக்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு காணி உரிமைக்கான மக்களின் போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதோடு, காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுக்கத் தயாராக இருப்பதாக சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

அத்துடன் காணி விடுவிப்பை வலியுறுத்தும் கவனயீர்ப்பும் இடம்பெற்றிருந்தது.

சவுதி சிறையில் ஆபத்தில் அனோஜன்! வெளிவராத அந்த திகில் நிமிடங்கள்

சவுதி சிறையில் ஆபத்தில் அனோஜன்! வெளிவராத அந்த திகில் நிமிடங்கள்

போராட்டக்காரர்கள் கோரிக்கை

இதன்போது தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இராணுவம் தற்போது பயன்படுத்தி வரும் பகுதிகளை மாற்று அரச அல்லது பொதுக் காணிகளுக்கு மாற்றி, மக்களின் பூர்வீக வாழ்விடங்களை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எட்டாவது நாளை எட்டிய கேப்பாப்புலவு போராட்டம்! காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு | Keppapulavu Protest Enters Eighth Day

இந்த கலந்துரையாடல் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வில் சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கேப்பாப்புலவு மக்களின் காணி உரிமைப் போராட்டம் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில் விரைவான தீர்வை எட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே வலுத்து வருகின்றது.

ஜூன் 30ற்குள் TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்..!

ஜூன் 30ற்குள் TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்..!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US